Saturday, December 12, 2009

நிகழ்ச்சிகள்

2009-2010 ஆண்டு நிகழ்ச்சிகள்

கல்வி வளர்ச்சிநாள் விழா



பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி




தமிழக அரசின் இலவச​ கண்ணொளி திட்டம்





பள்ளியில் செயல்படும் தமிழ் மன்றம்

Friday, June 5, 2009

சிகரம் நோக்கி

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
அதிராம்பட்டினம்.
25.06.1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி இதுவரையிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை தகுதியுடையவர்களாள உருவாக்கி உலகெங்கும் அனுப்பியுள்ளது. இப்பள்ளியின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 2008 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 92 சதவிகிதம் தேர்ச்சியும், பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 85 சதவிகிதம் தேர்ச்சியும் பெற்று சாதனைப் படைத்தமையாகும் இச்சாதனைக்குக் காரணம் இப்பள்ளியின் தாளாளர் ஜனாப் எஸ்.முகமதுஅஸ்லம் அவர்களின் மேலான தலைமையாகும். இவர் சென்ற ஆண்டு தமிழகத்தில் எவரும் பெறாத மிகச் சிறந்த விருதுகளைப் பெற்றவர் ஆவார்.
1


ஜனாப் எஸ். முகமது அஸ்லம் அவர்களுக்கு சென்னையில் முதன் முதலாக சிறந்த தொழிலதிபருக்கான 'கோல்டு ஸ்டார் மில்லெனியன்' விருது வழங்கப்பட்டது.

2



அவ்விருதினைத் தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ்தாய் அறக்கட்டளை இவருக்கு சிறந்த மனித நேயத்திற்கான 'மனிதநேய மாமணி' என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது.
3


மேலும் டெல்லியில் தேசிய ஒருமைப்பபாடு மற்றும் பொருளாதார குழுமம் சமுதாய பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைத்து சாதனை நிகழ்த்தியமைக்குத் தேசிய சாதனையாளர் விருதான இந்திராகாந்தி சத்பவனா விருது மற்றும் தங்கப்பதக்கமும் வழங்கியது.
4



இவ்விருதினைத் தொடர்ந்து சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஜனாப் எஸ்.முகமதுஅஸ்லம் அவர்கள் பாடு பட்டமைக்காக 'இண்டர்நேஷனல் கோல்டு ஸ்டார் மில்லேனியன் அவார்டு' என்ற சர்வதேச விருது தாய்லாந்து நாட்டில் வழங்கப்பட்டது.

எங்கள் பள்ளிளியின் தேர்ச்சி உயர்வுக்குப் பள்ளித் தாளாளர் ஜனாப் எஸ். முகமது அஸ்லம் அவர்களின் புதிய திட்டங்களும் வழிகாட்டுதல்களுமே காரணங்களாகும்.
1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று இடம் பெறும் எம் பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பிற்கான முழுக் கல்விக்கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டு இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவித்தது அவரின் முதல் திட்டமாகும்.
2. தாளாளர் அவர்களே பலமுறை பள்ளியைப் பார்வையிட்டு ஆசிர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி அவர்களை ஊக்கப்படுத்தியமை அவரின் இரண்டாவது திட்டமாகும். இவற்றின் விளைவே கூடுதலான தேர்ச்சி விழுக்காடும் பெருமையும் நம் பள்ளிக்குக் கிடைத்தது எனலாம்.
கல்வி உதவித்தொகை எங்கள் பள்ளியின் தாளாளர் அறிவித்தபடி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்கள்
1. எஸ். அகமது 456 மதிப்பெண்கள் முதலிடம்
2. எஸ். முகமது ரபீக் 453 மதிப்பெண்கள் இரண்டாமிடம்
3. ஆர். சிவானந்தம் 452 மதிப்பெண்கள் மூன்றாமிடம்
ஆகியோருக்கு 11ஆம் வகுப்பிற்கான முழுக்கல்விக் கட்டணமும் தாளாளர் அவர்களால் சலுகை அளிக்கப்பட்டு இலவச கல்வி வழங்கப்படுகிறது.
பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், ஏழைக்குடும்ப மாணவர்களுக்கும், அதிராம்பட்டினம் எத்தீம் கானா மதராஸாவில் மார்க்கல்வி பயிலும் மாணவர்கள் பள்ளிக்கல்வியைத் தொடர அம்மாணவர்களும்கும் எங்கள் பள்ளித் தாளாளர் ஜனாப் எஸ். முகமது அஸ்லம் அவர்கள் இவ்வாண்டு ரூ.12875/- கல்விக்கட்டண சலுகை வழங்கியுள்ளார்கள்.
2008-2009 ஆம் ஆண்டு தாளாளர் அவர்களால் கல்விக்கட்டண சலுகை வழங்கப்பட்ட மாணவர்கள் விபரம்.
1. கே. ஹாஜா அலாவுதீன் - 10 ஆம் வகுப்பு
2. கே. ரஹ்மான்கான் - 10 ஆம் வகுப்பு
3. ஜெ. பாஸித் அகமது - 9 ஆம் வகுப்பு
4. எம். வைசாத் அகமது - 9 ஆம் வகுப்பு
5. கே சதாம் உசேன் - 9 ஆம் வகுப்பு
6. எச். அஜ்மீர் ஹாஜா - 9 ஆம் வகுப்பு
7. எம். சர்புதீன் - 9 ஆம் வகுப்பு
8. எச்.எம். யாசர் அரபாத் - 9 ஆம் வகுப்பு
9. எ. ஆசிக் அகமது - 8 ஆம் வகுப்பு
10 எ. முகமது உஸ்மான் - 9 ஆம் வகுப்பு
11. மஹரூப் - 12 ஆம் வகுப்பு
12. என். முஜீபுர் ரஹ்மான் - 8 ஆம் வகுப்பு
13. எம். சிராஜீதீன் - 8 ஆம் வகுப்பு
14. எஸ். முகமது யுசுப் - 8 ஆம் வகுப்பு
15. எஸ். முகமது ரியாஸ் - 8 ஆம் வகுப்பு
16. ஜெ. ஆதில்கான் - 7 ஆம் வகுப்பு
17. எ. முகமது - 7 ஆம் வகுப்பு
18. சதாம் உசேன் - 7 ஆம் வகுப்பு
19. எம். ஜாபர் அலி - 7 ஆம் வகுப்பு
20. எம். செர்ஷா - 6 ஆம் வகுப்பு
21. எ. அப்துல் முனாப் - 6 ஆம் வகுப்பு
22. எம். பைசல் ரஹ்மான் - 6 ஆம் வகுப்பு
23. எச்.எம். ஷேக் அலி நாசர் - 6 ஆம் வகுப்பு
24. எ. அமீன் - 6 ஆம் வகுப்பு

2009-2010 ஆம் கல்வியாண்டு
2009 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் நம் பள்ளி 97 சதவிகிதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று சாதனைப் படைத்துள்ளது. 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் நம் பள்ளி 80 சதவிகிதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது.
இவ்வாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் 11 ஆம் வகுப்பு அனைத்துப் பிரிவுகளுக்கும் அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடன் உங்கள் பிள்ளைகளை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துப் பயனடையுங்கள்.
மேலும் எங்கள் பள்ளியில் சிறந்த அனுபமும் திறமையும் மிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி போதிக்கின்றார்கள். அனைத்து வசதிகளும் நிறைந்த இயற்பியல் ஆய்வகம், வேதியியல் ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் உள்ளன.
தலைமையாசிரியர்.
பள்ளித் தொலைபேசி எண் 04373 -242229

Saturday, February 21, 2009

KHADIR MOHIDEEN BOYS HR.SEC.SCHOOL, ADIRAMPATTINAM



KHADIR MOHIDEEN BOYS HR. SCE. SCHOOL
ADIRAMPATTINAM
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர், எம்.கே.என். மதரஸô அறக்கட்டளைச் செயலர் மற்றும் சென்னை ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன மேலாண் இயக்குநருமான எஸ். முகமது அஸ்லமுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான்கான் "இந்திரா காந்தி சத்பவன விருது' வழங்கியும், இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் அணிவித்தும் பாராட்டினர். தேசிய சாதனையாளர் விருது பெற்ற முகமது அஸ்லமுக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆயிஷா பவுண்டேஷன் நிறுவன இயக்குநர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  © Blogger template 'A Click Apart' by Ourblogtemplates.com 2008

Back to TOP